திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள உலக சமாதான ஆலயத்திற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வருகை தந்தார். அங்கு குருமகான் பரஞ்சோதியாரிடம் ஆசி பெற்ற அவர், பரஞ்சோதியாரால் பொன்னாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார். இந்த நிகழ்வில் பாஜக துணை பொதுச்செயலாளர் மற்றும் உடுமலை பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.