தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன், திருப்பூர் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவரை உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் பொன்னாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வில் மண்டல தலைவர் ஈஸ்வரசாமி, துணைத் தலைவர் தினேஷ்குமார், பொதுச் செயலாளர் விஜயன், மகளிர் அணி மாவட்ட தலைவர் பரிமளா சுப்ரமணியம், மகளிர் அணி ஒன்றிய தலைவர் அபிநயா, ஒன்றிய செயலாளர் லோகு மற்றும் அணிப்பிரிவு மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.