உடுமலை: அமராவதி அணை நிரம்பியதால் உபரி நீர் திறப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையில் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, காந்தலூர் போன்ற பகுதிகளில் தற்போழுது இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அமராவதி அணைக்கு தற்போழுது நீர்வரத்து 3000 கன அடிக்கு மேல் வந்துகொண்டு உள்ளது. 

இதற்கிடையில் அமராவதி அணை மொத்த 90 அடியில் தற்போழுது 87.70 அடிக்கு மேல் உள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அமராவதி அணை ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் 2000 கன அடி உபரி நீர் தற்போழுது வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கரையோர கிராமங்களான கல்லாபுரம், கொழுமம், குமரலிங்கம், ருத்ராபாளையம், மடத்துக்குளம், காரத்தொழுவு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டுமென நீர்வள துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி