உடுமலை: இலவச மடிக்கணினி கேட்டு மாணவர்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்கள், தங்களுக்கும் தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து கல்லூரி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வட்டாட்சியர் மற்றும் முதல்வர், முறைப்படி விண்ணப்பம் வழங்கினால் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இலவச மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி