உடுமலை மாணவன் மாநில அளவில் முதலிடம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் சந்தோஷ் கண்ணா, பொதுத் தேர்வில் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ளார். இவர் ஏற்கனவே எட்டாம் வகுப்பில் தேசிய மற்றும் முதல்வர் திறனாய்வுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த மாணவரின் சாதனையை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இந்தப் பள்ளிப் பொறுப்பு தலைமை ஆசிரியர் ஈஸ்வரன் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி