உடுமலை: சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு நேரடி மற்றும் நாற்று முறையில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வளர்ச்சி தருணத்தில் அதிக வெயிலால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. 

பின்னர் அறுவடை தருணத்தில் முன்னதாகவே தென்மேற்கு பருவமழையால் பணிகள் தாமதித்தது. இருப்பு வைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். விவசாயிகள் கூறியதாவது சின்ன வெங்காயம் சாகுபடிக்கு விதை, நாற்று மருந்து, உரம் என இடுபொருட்கள் செலவு பலமடங்கு அதிகரித்துள்ளது. 

குறிப்பிட்ட நேரத்தில் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியாமல் மழை துவங்கியது. அறுவடை தாமதம் காரணமாக சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி