திருப்பூர் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், குமரன் நகர் விரிவு பிஎஸ் ஆர் லேஅவுட் குடியிருப்பு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.