திருப்பூர் மாவட்டம் உடுமலை ராதாமணி, மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகளப் போட்டியில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். இவரின் இந்த சாதனைக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராதாமணி தொடர்ந்து மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.