ஆய்வின் போது பள்ளி பேருந்துகளின் படிக்கட்டுகள், தளம் மற்றும் இருக்கைகளின் உறுதித்தன்மை குறித்து சோதனை செய்யப்பட்டது. மேலும் வாகனங்களில் பின்னர் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர், போக்குவரத்து அலுவலர் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த ஆய்வின் முடிவில் 10 பேருந்துகள் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் கண்டறியப்பட்டு அந்த குறைபாடுகளை சரி செய்து தகுதிச் சான்று பெறும் வரை பேருந்து இயக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது உடுமலை தீயணைப்பு அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விபத்துக் காலத்தில் மீட்புப்பணிகள் மேற்கொள்ளும் வழிமுறைகள், தீ விபத்தின் போது செயல்பட வேண்டிய முறைகள் குறித்து ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆய்வின் போது உடுமலை போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.