உடுமலை: பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து சேதம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டு யுகேஜி நகர் பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து சேதமாகியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதால் பள்ளியின் சுற்றுச்சுவர் உடனே கட்ட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி