உடுமலை: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியபட்டி ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்து கோழிப்பண்ணை அமைத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான விவசாயிகள் உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

அப்போது கோட்டாட்சியர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் கோழிப்பண்ணை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி