திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் சில வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுர விளக்கு, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அகற்றப்பட்டதை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விளக்கை மீண்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.