உடுமலை: கோட்டமங்கலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் கிராமத்தில், கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து சிபிஐஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பொருளாளர் சுசீலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் சித்ரா, ஒன்றிய தலைவர் கலைவாணி, ஒன்றிய செயலாளர் ரேணுகா தேவி, துணை செயலாளர் சசிகலா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி