திருப்பூர் மாவட்டம் உடுமலை-பழனி சாலையில் அமைந்துள்ள டாட்வில் மழலையர் பள்ளியில் இன்று (ஜனவரி 4) பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை பள்ளி நிறுவனர் சௌந்தரராஜன் துவக்கிவைத்தார். தலைமை தாங்கியவர் ஸ்வேதா வெங்கடலட்சுமி. ட்ரஸ்டி பிரவீன் சிறப்புரை ஆற்றினார். 75க்கும் மேற்பட்ட குழந்தைகளும் 200 பெற்றோர்களும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான பரமபதம், பாண்டித்தாயம், பல்லாங்குழி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டன. மழலையர்கள் மகிழ்வுடன் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.