உடுமலை: இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்கூரை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள ஜோதி பாளையம் கிராமத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூரை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நிழற்கூரையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி