திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரியகுளம் பகுதியில், அபெக்ஸ் சங்கம் மற்றும் மழை உடுமலை இணைந்து ஒரு லட்சம் பனை விதைகள் விதைக்கும் நிகழ்வை இன்று நடத்தினர். உடுமலையின் 158வது தொடர்வாரம் மற்றும் 125வது நிகழ்வை முன்னிட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மழை உடுமலை அமைப்பின் நிர்வாகிகள், அபெக்ஸ் சங்கத் தலைவர் சந்திரன், செயலாளர் சீதாராமன், மூத்த உறுப்பினர்கள் சுப்பராமன், சீனிவாசன், கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.