திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலபட்டி அருகே ஆனைமலை பிரதான சாலைகளில் இருந்து தம்புரான்கோவில் வழியாக அமராவதி சாலைக்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தம்புரான் கோவில் பகுதியில் இருந்து ஆனைமலை சாலை வரை உள்ள பகுதி சேதம் அடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இரண்டு கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மூலம் நான்கு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணி செப்டம்பர் மாதம் தொடங்கிய நிலையில் தற்போழுது வரை பணிகள் முடியவில்லை. இதனால் கரடு முரடான பாதையில் பொதுமக்கள் சென்றுவரும் நிலையில் உள்ளனர். எனவே சாலையை பராமரிக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.