திருப்பூர் உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து சிறு, குறு, பெரிய வணிக நிறுவனங்களும் இந்த மாத இறுதிக்குள் தங்களது கடைகளுக்கு உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும். மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு உரிமம் புதுப்பிக்கும் கடைகளுக்கு 25% அபராதம் விதிக்கப்படும். உரிமம் புதுப்பிக்காத கடைகளை நகராட்சி அலுவலர்கள் கண்டறிந்தால், கடையை பூட்டி சீல் வைத்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.