அதன்படி கடந்த 21-ம் தேதி முதல் இன்று வரை ஒரு வாரத்தில் 237 டன் அளவுள்ள மக்காச்சோளம் குவின்டால் ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரத்து 310 முதல் ரூ. 2 ஆயிரத்து 360 வரை ரூ. 56 லட்சத்து 22 ஆயிரத்து 148 க்கு விற்பனையாகி உள்ளது. இதன் மூலமாக 33 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். இதனால் விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் மக்காச்சோளத்தை விற்பனை செய்து பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 9443962834 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!