திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பூலாங்கிணறு ஊராட்சிக்குட்பட்ட முக்கோணம் பகுதியில் சமுதாய நலக்கூடம் 5 ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமல் குப்பைக் கிடங்காகவும் புதர் மண்டியாகவும் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதன்பிறகு சமுதாய நலக்கூடம் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது.