உடுமலை: விவசாயிகளுக்கு கற்றல் பயிற்சி முகாம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஆகிய மூன்று ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்குதாரர்களாக உள்ள பஞ்சலிங்க அருவி கூட்டுப் பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் இயங்கி வருகிறது. 

மேற்படி நிறுவனத்திற்கு திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்திலிருந்து வேளாண்மை துறை அலுவலர் தலைமையில் 25 விவசாயிகள் கற்றல் பயிற்சிக்காக வருகை தந்தனர். விவசாயிகள் ஆர்வலர் குழு ஏற்படுத்துதல், அரசு மானியங்கள் பெறுதல், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல் போன்றவை பற்றி தலைவர் உடுக்கம்பாளையம் சு. பரமசிவம் விளக்கினார். 

நிறுவனத்தின் இயக்குநர்கள் முத்துச்சாமி, வெங்கடாசலம், முருகேசன், ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி மற்றும் நிறுவனத்தின் நிர்வாகி கீர்த்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி