திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்த கிரி, சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார். இந்நிலையில், இன்று உடுமலைக்கு வருகை தந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த கிரி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.