திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி, பொறுப்பாளர்கள் ராஜமாணிக்கம், கவிதா கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.