உடுமலை: கேரளா சைனிக் பள்ளி அணி சாம்பியன்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி நகர் சைனிக் இராணுவ பயிற்சி பள்ளியில் அகில இந்திய சைனிக் பள்ளிகள் இடையிலான ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றன. ஒரு வாரம் காலம் நடைபெற்ற போட்டியில் கேரளா சைனிக் பள்ளி முதல் இடத்திலும், ஒரிசா மாநில அணி 2ஆம் இடத்திலும், பெண்கள் பிரிவில் அருணாச்சல பிரதேசம் அணி முதல் இடத்திலும், ஆந்திர பிரதேசம் சைனிக் பள்ளி 2ஆம் இடம் பிடித்தது. 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இமாச்சலப் பிரதேசம் முதலிடத்திலும், அசாம் 2ஆம் இடத்திலும் பிடித்த நிலையில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பள்ளி முதல்வர் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி