திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறுமலை மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் புலி நகம் வைத்துள்ளதாக சின்னாறு சோதனை சுவாடியில் கேரளா வனத்துறையினர் பிடித்து நேற்று மாலை உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 31) அதிகாலை 4:30 மணியளவில் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்த நிலையில் இதற்கு மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதால் உடுமலை வனச்சரகம் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.