திருப்பூர் மாவட்டம் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டாள் சீனிவாசன் லேஅவுட் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் வழியில் ஓடை குறுக்கிடுவதால் நகராட்சி சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் தற்போழுது உயரமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.