தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, உடுமலை பழனி பைபாஸ் சாலையில் செயல்படும் அரசு போக்குவரத்து கழக உடுமலை கிளை, கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சிக்கு 1.31 கோடி ரூபாய் தொழில் வரி செலுத்தவில்லை. இது குறித்து அதிகாரிகள், பணப் பற்றாக்குறை காரணமாக வரி செலுத்த முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.