திருப்பூர் மாவட்டம் உடுமலை போக்குவரத்து கிளையில் அரசு பேருந்து (2A) வழக்கம்போல் இன்று சென்றுகொண்டிருந்தபோது, அதன் இடது உள் டயர் மோசமான நிலையில் இருந்ததால் வெடித்து பரபரப்பு ஏற்பட்டது. இதனால், சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், டயர் பிரிவில் பணிபுரியும் தொழில்நுட்ப பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.