திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செல்லம் குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் குப்பைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தாலும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட உடுமலை ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.