உடுமலை: குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைப்பு

உடுமலை அருகே திருமூர்த்திமலை, பொன்னாலம்மன் வளையபாளையம், தேவனூர் புதூர் பகுதிகளில் தென்னந்தோப்புகளில் புகுந்த குரங்குகள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை நாசம் செய்ததால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட அலுவலர் ராஜேஷ் உத்தரவின் பேரில், வனச்சரகர் வாசுவின் மேற்பார்வையில் வனத்துறையினர் விவசாய நிலங்களில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி