உடுமலை: பெண்ணின் கையில் சிக்கிய மோதிரம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமம் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் அணிந்து இருந்த மோதிரம் வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நகைப்பட்டறைக்கு சென்றபோது காயம் ஏற்பட்டது. 

பின்னர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு வருகை புரிந்த பெண்ணிற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து அறிவுரைப்படி தீயணைப்பு வீரர்கள் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் அறுக்கும் ஆக்ஸா பிளேடு பயன்படுத்தி எந்த விதமான காயமின்றி மோதிரத்தை அகற்றினர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி