திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஐம்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் விளைச்சல் குறைவால் தக்காளி சாகுபடியாளர்கள் பாதிப்படைவதை தவிர்க்க நடமாடும் மதிப்பு கூட்டு இயந்திரத்தை உடுமலை பகுதிக்கு ஒதுக்கீடு செய்து பொருட்களை சந்தைப்படுத்த அரசு உதவ விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.