உடுமலை: யானைகள் நடமாட்டம் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணையில், பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே 6 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்ததால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், ட்ரோன் கேமரா மூலம் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி