உடுமலை: திருமூர்த்தி அணை பகுதியில் முதியவர் கொலை?

திருப்பூர் உடுமலை அருகே திருமூர்த்தி அணை படகு இல்லம் பகுதியில் 71 வயது முதியவர் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதியவரின் தலையில் ரத்தக் காயம் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி