திருப்பூர் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர் சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் அடிவள்ளி முரளி, தொகுதி பார்வையாளர் தமிழ்மறை ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எஸ்ஐஆர் திருத்த பணிகள் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள், மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.