உடுமலை: முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தேராட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்த நிலையில் நடப்பாண்டில் கோவில் திருவிழா கடந்த 3-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் கம்பம் போடுதல், தீர்த்தம் வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்த நிலையில் முக்கிய நிகழ்வான நேற்று திருத்தேரோட்டம் சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் கோவில் பகுதியில் இருந்து துவங்கியது. 

அப்போது திருத்தேரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் தேர் ஆனது கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். 

கடந்த மூன்று ஆண்டுகளாக திருத்தேரோட்டம் நடைபெறாததால் நேற்று (ஜூன் 11) இரவு காவல்துறையினர் பாதுகாப்போடு நடத்தியதால் சுண்டக்காம்பாளையம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருத்தேரோட்டம் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி