உடுமலை: கொத்தமல்லி மகசூல் பாதிப்பு- அதிகாரிகள் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆலமரத்தூர் சுற்றுப்பகுதிகளில் கொத்தமல்லி அதிக அளவு சாகுபடி செய்திருந்த நிலையில் தரமற்ற விதைகளால் போதிய வளர்ச்சி இல்லாமல் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதை விற்பனை செய்த கடை மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் அடுத்த கட்ட ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஏக்கருக்கு ஏழு டன் முதல் எட்டு டன் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் மகசூல் முழுவதும் பாதிக்கும் அபாயம் உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி