திருப்பூர் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி சின்னப் பூலாங்கிணறு பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்ட தார் சாலை, சில மாதங்களிலேயே பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சாலை பராமரிப்பு அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். முன்பு தார் சாலை அமைக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதன் மோசமான நிலை காரணமாக மீண்டும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.