உடுமலை: குடிமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை மாநாடு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் குடிமங்கலம் கட்சி கிளை மாநாடு கிட்டுசாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை கட்சியின் மூத்த தோழர் பி. பசுபதி ஏற்றி வைத்தார். 

கிளை செயலாளர் கே. மகேஸ்வரன் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார். மாநாட்டில் கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய பொறுப்பு செயலாளர் தோழர் என். கிருஷ்ணசாமி கலந்து கொண்டு அரசியல் விளக்க உரை ஆற்றினார். மாநாட்டில் கிளை செயலாளராக தோழர் கே. மகேஸ்வரன், துணைச் செயலாளராக தோழர் ஏ. கிட்டுசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. குடிமங்கலம் அரசு மருத்துவமனை 30 படுக்கை வசதிகளுடனும் மேலும் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்கும் வசதிகளுடனும் செயல்பட்டு வருகிறது. எனினும் நோயாளிகள் தங்கி மருத்துவ வசதி பெற இங்கு அனுமதிப்பதில்லை. 

குடிமங்கலம் பகுதி மிக முக்கியமான சுற்றுக் கிராமங்களில் இருந்து 50,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. எனவே குடிமங்கலம் அரசு மருத்துவமனையை மேலும் பல வசதிகளுடன், மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவமனை தரத்தை உயர்த்திட இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது. உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி