கூட்டத்தில் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் பேசும்போது, இன்றைய தினம் பாஜகாவை பொருத்தவரை, ஆத்மார்த்தமாக எங்களது மனதோடு ஒன்றியிருக்கக்கூடிய சிறப்புவாய்ந்த நாள், கட்சியின் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை, தலைவர்களும், தொண்டர்களும், ஆங்காங்கே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்களைச் சேர்க்கும் பணிகள், அந்தந்த பகுதி மக்களுக்குத் தொண்டாற்றுவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தமிழகத்தில் பாஜகவின் 65 ஆயிரம் கிளைகளிலும், கிளைத் தலைவர்களை முன்னிலையில், நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அத்தனை இடங்களிலும் பொதுமக்களும் கலந்துகொண்டு உள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் கட்சியாக பாஜக உள்ளது என்றார்.