அப்போது முன்னாள் தமிழ்நாடு பாடநூல் வாரிய தலைவரும் எம்ஜிஆர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவருமான லியாகத் அலிகான் அவர்களுக்கு திரை உலகம் கண்ட உடுமலை மண்ணின் மைந்தர் விருதும், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தொழிற்சங்க மாவட்ட செயலாளருமான குணசேகரன் அவர்களுக்கு தொழிலாளர்களின் தோழன் விருதும், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கம் மாவட்ட சங்க தலைவர் பால்நாரயணன், உடுமலை முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் குறிச்சிக்கோட்டை சுப்பிரமணியம், முன்னாள் சமத்துவமக்கள் கட்சி மாவட்ட தலைவர் உடுமலை ராஜா ஆகியோருக்கு மக்கள் சேவகர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இறுதியாக சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. உடுமலை மடத்துக்குளம், தாராபுரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.