இந்த நிலையில் காலிபிளவர் சாகுபடி செய்துள்ள பகுதியில் எதிரில் செயல்பட்டு வரும் தென்னை நார் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் துகள்கள் காலிபிளவர் சாகுபடியை அடியோடு பாதித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையில் விற்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் மூன்று ஏக்கருக்கு மேல் காலிபிளவர் சாகுபடி செய்திருந்தோம்.
தற்போது அறுவடை நடைபெற்று வரும் வெள்ளை பூ தற்போழுது சிவப்பு நிறம் பூவாக மாறிவருகிறது. இதனால் உடுமலை தினசரி சந்தைகள் காலிஃப்ளவர் வாங்க மறுக்கின்றன. மேலும் தற்போழுது 3 ஏக்கர் பரப்பளவில் 16,000 பூக்களுக்கு மேல் தென்னை நார் துகள்கள் பரவல் காரணமாக தற்போது சிவப்பு நிறமாக மாறிவிடுவதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.