உடுமலை: கிளை கால்வாய் மடை அடைப்பு -விவசாயிகள் அதிர்ச்சி!

திருப்பூர் உடுமலை அருகே மைவாடி வாய்க்காலில் 4-ம் தண்ணீர் பாய்ந்து வரும் நிலையில், சுமார் 30 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழி இல்லாமல் சிலர் கான்கிரீட் போட்டு மடையை அடைத்துள்ளதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, இனியும் காலதாமதம் செய்தால் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் உட்பட பலகட்ட போராட்டங்களில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி