திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் பெரியபட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்குவதற்கான முகாம் நடைபெற்று வருகின்றது. மேலும் பெரியபட்டி கிராமத்திற்கு பிரகாஷ் என்ற அலுவலர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 9524829514 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு குடிமங்கலம் வட்டார வேளாண்மை துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.