திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குமரலிங்கம் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால் பிப்ரவரி மாதம் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படவில்லை. எனவே, கணக்கீடு செய்யப்படாத மின் நுகர்வோர் கடந்த டிசம்பர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை நடப்பு பிப்ரவரி மாதம் செலுத்த உடுமலை செயற்பொறியாளர் அறிவுறுத்தியுள்ளார்.