உடுமலை: குடிமங்கலத்தில் கலைஞர் பிறந்த நாள் விழா

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிமங்கலம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொங்கல் நகரம் ஊராட்சியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கலைஞர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உடுமலை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், குடிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முரளி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி