இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், முன்கூட்டியே தனியார் பஸ் வந்திருந்தால் அதன் மீது முறைப்படி ஆட்டோ டிரைவர்கள் புகார் அளித்திருக்கலாம். அதைவிடுத்து பஸ்சை வழிமறித்து நிறுத்தியது வேதனை அளிக்கிறது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக பொதுமக்கள் பாதிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்றாகும். போக்குவரத்து நெருக்கம் மிகுந்த உடுமலை- பழனிசாலையில் பஸ்சை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசலும் நிலவியது. இதனால் கல்லூரி முடித்துவிட்டு வெளியே வந்த மாணவிகள் வீட்டுக்குச் செல்வதிலும் காலதாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து உடுமலை போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
திருப்பூர்
கருப்பு கொடி ஏற்றி வைத்து போரட்டம்