திருப்பூர் உடுமலை ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் லேசர் ஒளி விளக்குகளில் கண் கவர் நடனம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பள்ளி தாளாளர் ரவீந்திரன் கெங்குசாமி மாணவர்களின் முன்னேற்றங்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். முன்னாள் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் சிறப்புரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டனர்.