உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 2 அடி உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1380 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து, மொத்த 90 அடியில் தற்போது 68 அடியாக உள்ளது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி