உடுமலை: வேகமாக நிரம்பும் அமராவதி அணை; வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் போன்ற பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருகின்றது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து ஆயிரம் வினாடிக்கு கன அடிக்கு மேல் நீர்வரத்து வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் அமராவதி அணையின் மொத்த 90 அடியில் தற்பொழுது 85.11 அடியாக உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அமராவதி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம்.

எனவே அமராவதி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள கல்லாபுரம் ருத்ராபாளையம் கொழுமம் குமரலிங்கம் மடத்துக்குளம் கணியூர் காரத்தொழவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை சார்பில் தற்பொழுது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி